திங்கள், 11 மார்ச், 2013

சூரிய நமஸ்காரம்


கண்கள் கண்ட பொழுது,
சூரியனை நமஸ்கரிக்க வில்லை.
கண் கெட்ட பிறகு அதென்ன,
சூரிய நமஸ்காரம் என்கிறீர்களா?
அந்தக் கண் கெட்டதே,
கிரகணத்தன்று சூரியனை,
நமஸ்கரித்ததால் தானே.
காண்பது காணும் பொழுது கானல்,
சாலச் சிறந்தது என்று கண்,
கெட்ட பிறகு அறிந்தேன்.
அந்தோ பரிதாபம்.
இந்நிலை தவிர்ப்போம்,
இன்னல்களை களைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக